Advertisements

மதுரை மாநாட்டில் அதிமுக பற்றி பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்திருக்கிறார் விஜய் விவரம் தெரியாமலும் அறியாமலும் பேசுகிறார் என அவர் தெரிவித்துள்ளார் . மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஜய் முதன்முறையாக அதிமுக குறித்து விமர்சனம் செய்தார்
அவர் பேசும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி பெயரைச் சொல்லாமல் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்பொழுது எப்படி இருக்கிறது? அந்தக் கட்சியை பாதுகாப்பது யார் அந்த கட்சியில் உள்ள தொண்டர்கள் எல்லாம் மனம் வெதும்பி போய் இருக்கிறார்கள். இதையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றார்
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்பொழுது விஜய்க்கு உடனடியாக பதிலளித்தார் . அவர் பேசும் பொழுது யாரெல்லாம் புதிதாக கட்சி தொடங்குகிறார்களோ அவர்கள் நம் தலைவரை சொல்லித்தான் துவங்க முடியும் சிலர் அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள் பாவம் அறியாமையில் பேசுகிறார்கள்.
இது கூட தெரியாமல் கட்சிக்கு தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுகிறார்கள் மரம் என்பது உடனே வளராது செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூ பூத்து காய் காய்க்கும் அப்படித்தான் ஒரு இயகமும் வளர முடியும் எடுத்த உடனேயே எந்த இயக்கமும் மக்களுக்கு நல்லது செய்து விட முடியாது .
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை தந்திருக்கிறோம் இது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனையே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள் . மக்கள் செல்வாக்கு பெற்றதை போலவும் நாட்டுக்கு உழைத்தது போலவும் அவர்கள் வந்ததுதான் மக்களை காப்பாற்ற போவது போலவும் சிலர் அடுக்க மொழியில் பேசுகிறார்கள் . நான் யாரைச் சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம் .1976 முதல் படிப்படியாக உழைத்து முன்னேறி இருக்கிறேன் சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள் . அது நிலைக்காது ஏனென்றால் உழைப்புதான் நிரந்தரம் இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் . ஆனால் அவர்கள் சாதித்தது என்ன எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்ஜிஆர் ஜெயலலிதா அண்ணாதுரை எல்லோருமே எடுத்ததுமே முதல்வராகவில்லை மக்கள் நன்மதிப்பை பெற்ற பிறகு தான் முதல்வராக வர முடிந்தது.
மற்றவர்களைப் போல திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் வருமானத்தை பெற்று ஓய்வு பெறும் காலத்தில் அரசின் கட்சி தொடங்கிய நிலை கிடையாது . ஒரு படத்தில் நடித்த உடனே கதாநாயகன் ஆகிவிட முடியாது பல படத்தில் நடித்த பிறகுதான் கதாநாயகன் ஆக முடியும் சினிமாவிலேயே அப்படி என்றால் அரசியலில் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடாமல் எப்படி விஜய் பேசினாரோ அது போலவே காஞ்சிபுரம் கூட்டத்தில் விஜய் பெயரை சொல்லாமலேயே எடப்பாடி பழனிச்சாமி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements


