today rasipalan:இன்றைய ராசிபலன் – 13.08.2024

Advertisements

மேஷம்


உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வுக்குண்டான வழி பிறக்கும். வியாபாரிகளுக்குத் தங்கள் கடை பொருட்கள் முழுமையாக விற்று தீரும். உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லத் திட்டமிடுவீர்கள். அதற்குப் பெற்றோரின் உதவி கிடைக்கும். உடல்நலம் சிறக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வான்நீலம்

ரிஷபம்


பெண்கள் தங்கள் கணவரின் மனம் கோணாதவாறு நடப்பது நல்லது. கலைஞர்களுக்குப் பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். விசா முயற்சிகள் பலிதமாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களது வேலைகளைப் பங்கு போடுவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள். காரியம் ஒன்று எளிதில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மிதுனம்


நீண்டநாட்களாகத் தங்கள் மகளுக்குத் தேடிக் கொண்டிருந்த வரன் கிடைக்கும். ஏற்றத் துணையை தேர்ந்தெடுப்பர். உறவினர்களின் வழியில் செலவு உண்டாகும். தள்ளுபடியால் விற்பனை கூடும். இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்


காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். அரசு வேலைகள் சாதகமாகும். உத்யோகத்தில் தங்களுக்கெதிராகச் செயல்பட்ட அதிகாரி மனமாறி செயல்படுவார். சில்லரை வியாபாரிகளுக்குப் புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்


உறவினர்கள் வருகை இன்பமளிக்கும். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். இன்று செய்ய வேண்டிய பணிகளை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். தங்கள் விசயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை நீங்கள் அறவே விரும்பமாட்டீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி


வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தங்களுக்கு பிடித்த கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். வீட்டை அலங்கரிப்பீர்கள். அரசு அதிகாரிகள் பொறுமையை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். பெற்றோர்களைக் காண சொந்த ஊருக்குச் சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்


பழைய நண்பர்களைச் சந்திக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். தங்கள் கீழ் பணியாற்றும் வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் கோபத்தை காட்டாமல் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. தேகம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

விருச்சிகம்


நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். பெண்களுக்கு நுரையீரல் மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை வரலாம் இயற்கை வைத்தியத்தை நாடுவது நல்லது. எதிர்பார்த்த நல்ல காரியம் நடந்தேறும். உணவு விசயத்தில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம் பழுப்பு : நிறம்

தனுசு

இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும்.பங்குச் சந்தை கைக்கொடுக்கும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். வங்கி கடன் இனிதே அடையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மகரம்


மகன்வழி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியாகத் தங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். திடீர் பயணங்கள் வந்துப் போகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வீட்டில் விசேஷங்களுக்கு இடம் உண்டு. வியாபாரத்தினை விரிவுபடுத்துவர். வெளியூர் சென்று தங்கள் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபத்தினை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்


முன் கோபம் வரும். அதனை, அடக்கி ஆள்வது தங்களது பக்குவத்தை வளர்க்க உதவும். முகம் சாந்தமாகும்.
மாணவர்களின் தேவைகளைத் தங்களின் பெற்றோர்கள் பூர்த்திசெய்வர். வீடு வாங்குவது, மாறுவது நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசிச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்


இன்று ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். யாரிடமும் வாக்கு வாதம் செய்யாதீர்கள். பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளைத் துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *