எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்.!

இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், கனமழையின் காரணமாக நாகையில்  இனறு பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது மற்றும் காரைக்காலில்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *