
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு கடும் கண்டனம் தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் பொறித்த டிஷர்டை அணிந்ததை எதிர்த்துச் சென்னை ஐகோர்ட்டில் சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகுறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு பொருந்துமா?
டிஷர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டபதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?
அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? எனத் தமிழக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.



