
இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் போட்டி கள நிலவரம் என்ன?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் அக்டோபர் 22-ஆம் தேதி மாலை 2 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டியானது ஹிமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் நடைபெற உள்ளது.
இது வரை இந்தியா போட்டியிட்ட மூன்று விளையாட்டுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முன்னேறி நல்ல வலுவான நிலையில் உள்ளது. அதே போல நியூசிலாந்தும் எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தும் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு அணிகளும் வரும் ஞாயிறு மோத உள்ளதால் கடும் போட்டி நிலவும். அதேசமயம் ரசிகர்களிடையே அதிக ஆர்வமும் , எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இதுவரை இவ்விரு நாடுகளும் 62 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 22 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. நியூசிலாந்து 13 போட்டிகளிலும், 27 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
HPCA ஸ்டேடியத்தின் பிட்ச் ஆனது பந்து வீச்சாளர்களுக்கு, ஏற்றதாக இருக்கும்.குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். ஆட்டத்தின் ஆரம்பத்தில் பந்தை நகர்த்துவதன் மூலம், பவர் பிளேகள் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும். முதலில் பந்து வீசுவது யாரோ அவர்களுக்கு சாதகமாக
வானிலையைப் பொறுத்தவரை மிகவும் குளிர் நிலவ வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.37 டிகிரியிலிருந்து 13 டிகிரி வரை இருக்கலாம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு வீரர்களும் நல்ல பயிற்சி மேற்கொண்டுள்ளதால் போட்டி நிச்சயமாக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் .


