National Medical Commission: மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை!

Advertisements

செப்டம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு தமிழக அரசுக் கடிதம் எழுதியது.

இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மராட்டிய மாநிலம், பீகார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

National Medical Commission

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *