What bro, its very wrong bro என கிண்டலடித்த விஜய்!

Advertisements

த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், மக்கள் நலன் நாட்டின் நலன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அகற்ற வேண்டும் என்று விஜய் பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

* விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது.

* பூத் ஏஜெண்டுகளைப் பலப்படுத்த வேண்டும்.

* த.வெ.க. தமிழகத்தில் முதன்மை சக்தி என்பது நிரூபணமாகும்.

* சாதாரண குடும்பத்திலிருந்து வந்தோர் அரசியலுக்கு வரக்கூடாதா?

* மும்மொழி கொள்கை என்ற புதிய பிரச்சனை கிளப்புகின்றனர்.

* கல்வி நிதியை மாநில அரசுக்குத் தரமாட்டோம் எனக் கூறுகின்றனர். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள்போல் சண்டை போடுகின்றனர்.

* நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நிதிய பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.

* என்ன பிரச்சனை என்று தெரியாமல் சண்டையிடுவது போல் சண்டையிட்டு ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.

இவங்க இரண்டு பேரும் அடித்துக்கொள்கிறபோது அடித்துக்கொள்வார்களாம். இதை நாங்க நம்பணுமாம்

What bro, its very wrong bro எனத் தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளைக் கிண்டலடித்த விஜய், தமிழ் மண் சுயமரியாதை கொண்ட மண். ஒரு மொழியைத் திணித்தால் எப்படி? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மொழிக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு மொழியை வலுக்கட்டாயமாக்க திணிப்பதா?

மாநில மொழிமீது வேறொரு மொழியை அரசியல் ரீதியாகத் திணித்தால் எப்படி Bro?

எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை.

பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு மும்மொழிக்கொள்கையை எதிர்ப்போம் என்றார்.

தொடர்ந்து Confident ஆக இருங்கள் வெற்றி நமதேயெனக் கூறி விஜய் உரையை முடித்துக்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *