மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் செய்த செயலை பாருங்களேன்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகப்பட்டவரை ஒருவர் கத்தியாலும் பீர் பாட்டிலாலும் குத்திக்கொல்ல முயன்றுள்ளார்.

ஆரணி அடுத்த விண்ணமங்கலத்தைச் சேர்ந்த பாரதி தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாரதியின் மனைவிக்கும் விண்ணமங்கலத்தில் திருமண மண்டபம் நடத்தி வரும் மருசூரைச் சேர்ந்த மோகன்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாரதி திருமண மண்டபத்தின் வெளியே அமர்ந்திருந்த மோகன்குமாரைக் கத்தியாலும் பீர் பாட்டிலாலும் குத்திக் கொல்ல முயன்றுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காயம் அடைந்த மோகன்குமாரை மீட்டுப் பொதுமக்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள பாரதியை வலை வீசித் தேடி வருகின்றனர்.

கண்காணிப்புக் கேமராவில் பதிவான தாக்குதல் காட்சிகள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *