Kadayanallur: முப்பெரும் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

Advertisements

கடையநல்லூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு கேடயம்வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் லயன்ஸ் சங்கம் சார்பில் இதய செயலிழப்பு தற்காப்பு மருந்து பெட்டகம் வழங்குதல், சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

விழாவிற்கு  லயன்ஸ் சங்கத் தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார்.முப்பெரும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராகதென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தது இதய நோய்தற்காப்பு மருந்து பெட்டகங்களை பயனாளிகளுக்கு வழங்கிப் பல்வேறு துறைகளைச் சார்ந்த நபர்களுக்குப் பாராட்டு கேடயம் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் சஞ்சீவி இதய தற்காப்பு மருந்தினை மகத்துவத்தினை விளக்கிப் பேசினார் அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கிப் பேசினார். விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி  இதயம் காப்போம் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் சஞ்சீவி டாக்டர் ப்ரோஸ் கான் லயன் எஸ் பூவானந்தம், லயன் சண்முகசுந்தரம் கலந்தர் மஸ்தான் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *