2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்குறித்து பிரதமர் மோடி முதன் முறையாகப் பேசியிருக்கிறார். நெட்வொர்க் 18 என்ற குழுமத்திற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்…
2014 ஆம் ஆண்டு இந்திய மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. ஆனால் எனது தேர்தல் வாக்குறுதியை நம்பி என்னை வெற்றி பெறச் செய்தார்கள். இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய மக்களுக்கு என்னை நன்றாகவே தெரிந்தது .ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் அந்த ஆட்சி நிலையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட இந்தியர்கள் மீண்டும் எனக்கு வாக்களித்து மிகப் பிரம்மாண்ட வெற்றியைத் தந்தார்கள். எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நானே தான் மீண்டும் பிரதமராக ஆவேன் இதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. கல்வி, பொருளாதாரம், பெண்கள் நலன் என அனைத்து துறைகளிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது உலக நாடுகளுக்குச் சவால் விடும் வகையில் இந்தியாவின் முன்னேற்றம் வெற்றிகரமாகப் பயணிக்கிறது
சமையல் வாயு விலை 200 ரூபாய் குறைத்தது போல் நாட்டின் பண வீக்கத்தையும் குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பாஜக ஆட்சி இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறியிருக்கிறார்.

