தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்கள்.. மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு.!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான, வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன்படி, தமிழகத்தில் திமுக நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களையும், அதிமுக இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களையும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

னவே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கலாம் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *