ஊடுருவல்காரர்களை வைத்து வெற்றி பெற விரும்புவதாக அமித்ஷா குற்றச்சாட்டு!!

ஊடுருவல்காரர்களை பாதுகாத்து, அவர்கள் உதவியுடன் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் விரும்புகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளான இன்று, டெல்லி அரசின் 17-பொது நலத்திட்டங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது, காங்கிரஸ் கட்சி வாக்காளர் அதிகாரம் பேரணியை நடத்துகிறது என்றும், இந்த பேரணி ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காக. அதன்மூலம் அவர்களுடைய உதவியோடு, தேர்தலில் வெற்றிபெற விரும்புகிறது என்றும்,

ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து நம்முடைய வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும், ஏனென்றால், அவர்கள் இந்திய மக்களை நம்பவில்லை. ஊடுருவல்காரர்கள் உதவியோடு தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறார்கள் என்றும், வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வதற்கான, எஸ்.ஐ.ஆர். செயல்பாட்டை பாஜக ஆதரிக்கிறது எனறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *