
சங்ககிரியில் ஐக்கிய குறுத்தோலை பவனி நடந்தது. இதில் , ஏராளமான கிருத்துவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர்.சங்ககிரியில் திருச்சபை ஊழியங்கள் ஐக்கியத்தின் சார்பில் குருத்தோலை பவனியை முன்னிட்டு புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் பங்கு தந்தை கிருபாகரன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான கிருத்துவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி சந்தைபேட்டை, புதிய எடப்பாடி சாலை வழியாக சென்று பவானி மெயின் ரோடு , பழைய எடப்பாடி சாலை சி.எஸ்.ஐ சபையில் நிறைவு பெற்றது.
பொதுவாக இந்த நிகழ்வு உலகின் பல கிருஸ்தவ நாடுகளில் கொண்டப்படுகிறது. இயேசுவின் வருகையை ஒட்டி பல நாடுகளில் குருத்தோலையை கையில் ஏந்திய படி பவனியாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் வழிபடுவர்.
இதில் பாஸ்டர்கள் ஜோசப்பூபதி, ஜெய்சிங், சாமுவேல் மற்றும் அன்புராஜ் ஆகியோர்கள் நிறைவு ஜெபத்தை செய்தனர். இயேசு அரசாளுகிறார் ஊழியங்கள் நிறுவனர் அற்புதராஜ் நன்றியுரை வழங்கினார்.
