
உலகின் மிக சிறந்த காட்டூன் ஓவியர். 1901ம் ஆண்டு டிசம்பர் 05ம் தேதி அமெரிக்காவிலுள்ள சிக்காகோவில் பிறந்தார். வால்ட் டிஸ்னியும் அவரின் பணியார்களும் சேர்ந்து உருவாக்கிய கற்பனை தான் மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவைகளாகும்.
வால்ட் டிஸ்னி சிறந்த திரைப்பட, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். மேலும் இவர் வணிக நோக்குடைய பூங்கா மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனராக இருந்தார்.
வால்ட் டிஸ்னி உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து பூங்கா மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், டோக்கியோ டிஸ்னி மற்றும் டிஸ்னிலாந்து ,சீனா போன்ற பூங்காக்களின் என பெயரையே பல நாடுகள் பூங்காக்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இளமைக்காலம்;
வால்ட் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சிக்காகோவில் ஈரானியக் கனேடியரான எலியாஸ் டிஸ்னிக்கும், ஜெர்மனிய மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் முதன் முதலாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவருக்கு ஒரு குதிரை படம் ஒன்றினை பணத்திற்காக வரைந்து கொடுத்தார். டிஸ்னி வண்ண பென்சில்கள் மற்றும் கிரேயான்ஸ் கொண்டு தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொண்டார்.
வால்ட் டிஸ்னி மெக்கின்லே உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். அதில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். மேலும் சிகாகோ அகாதமியில் இரவு படிப்பினை மேற்கொண்டார்.
வாழ்க்கை வரலாறு;
1920 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி , ஐவெர்க்ஸ் ஆகியோர் இணைந்து தொழில் துவங்கினர். ஆனால் அத் தொழில் சரிவர அமையாததால், ஐவெர்கஸ் உடன் இணைந்தார். அதனை அவர்கள் பிரிவகம் அசைவுப்படம் மூலம் செயல்படுத்தினர். அப்பொழுதுதான் டிஸ்னிக்கு அசைவுப்படத்தின் மீது ஆர்வம் வந்தது.பின்பு டிஸ்னி தன்னுடைய சக பணியாளருடன் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றினைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெரும் பகுதி நியூமேன் திரையரங்கிற்கு செய்து தந்தனர். எனவே அந்த வெற்றியின் காரணமாக லாஃப் ஓ கிராம் (Laugh-O-Gram Studio) என்ற ஓவிய அறையினை வாங்கினார். அந்த நிறுவனத்தில் பல அசைவுப்பட நிபுணர்களை வேலைக்கு அமர்த்தினார்.
எனவே டிஸ்னி அலைஸின் அற்புத உலகம் (Alice’s Wonderland) என்பதனை நிறுவினார். அந்நிறுவனமானது அலைஸின் சாகசத்தின் அற்புத உலகம் (Alice’s Adventures in Wonderland) என்பதனை அடிப்ப்டையாகக் கொண்டது ஆகும். பின்னர் அவருடைய தம்பியுடன் இணைந்து தெ வால்ட் டிஸ்னி என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தின் பெயரிலேயே அவர்கள் படங்களைத் தயாரித்தனர்.
மிக்கி மவுஸ் உருவாக்கம்:
ஓஸ்வல்ட் என்பதற்கு பதிலாக டிஸ்னி மற்றும் ஐவெர்க்ஸ் இணைந்து மிக்கி மவுஸ் என்பதனை உருவாக்கினர். 1947 ம் ஆண்டு வரையில் மிக்கி மவுஸிற்கு ஒலி வடிவம் கொடுத்து வந்தனர். பிறகு உயிர் வடிவம் கொடுத்தார்.
மறைவு;
வால்ட் டிஸ்னியின் கனவான வால்ட் டிஸ்னி உலக உல்லாச நகரம் அமைக்கப்பட்டு திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் காலமானார் என்பது வருத்தமான செய்தியாகும்.
ஆஸ்கார் விருதுகள்;
மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு ஆஸ்கார் விருது வாங்கிய பெருமையைக் கொண்டவர். வால்ட் டிஸ்னி வாங்கிய நான்கு ஆஸ்கார்கள் சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

