Advertisements

ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி என்னவெல்லாம் செய்தது தெரியுமா? சினிமாவை மிஞ்சும் காட்சிகள்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் பேசும்போது எனது வீட்டில் அதுவும் எனது நாற்காலிகிலேயே ஒட்டு கேட்கும் கருவி ஒன்றை பொருத்தி வைத்திருக்கிறார்கள் அது லண்டனில் இருந்து வந்தது என்று குற்றம் சாட்டினார்.அந்த ஒட்டு கேட்கும் கருவியை யார் வைத்தது? அந்த கருவி என்ன வேலை எல்லாம் செய்தது என்பது போன்ற விஷயங்கள் சினிமாவை மிஞ்சும் காட்சிகளாக இருக்கின்றன.
மருத்துவர் ராமதாஸ் நாற்காலியில் வைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது இதன் விலை நான்கு லட்சம் ரூபாயாகும் இந்த ஒட்டு கேட்கும் கருவி இரண்டு வகையில் இருக்கிறது ஒன்று இன்டர்நேஷனல் சிம் கார்டு பொருத்தப்பட்டது இந்த சிம் கார்டு பொருத்தப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி 500 மீட்டர் சுற்றளவில் யார் என்ன பேசினாலும் அதனை கிரகித்து சம்பந்தப்பட்ட செல்போனுக்கு ஆடியோவாக அனுப்பி விடும் சம்பந்தப்பட்டவர் உடனடியாகவே என்ன நடந்தது என்பதை கேட்க முடியும் இப்படிப்பட்ட கருவிதான் மருத்துவர் ராமதாஸ் நாற்காலியில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த ஒட்டு கேட்கும் கருவியை சௌமியா அன்புமணி சார்பில் ஒரு பெண் கொண்டு வந்து பொருத்தியதாக தெரிகிறது ஆனால் உறுதி செய்யப்படவில்லை இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாகவே ராமதாஸ் என்ன பேசினாலும் அது உடனடியாக சவுமியாவுக்கும் அன்புமணிக்கும் சென்றடைந்தது .முன்னாள் மாவட்ட மாநில நிர்வாகிகள் தற்போதைய மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை கைபேசியில் தொடர்பு கொண்டு நாளை தைலாபுரத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் ராமதாஸ்
அடுத்த ஒரு மணி நேரத்தில் ராமதாஸ் யாரை எல்லாம் அழைத்தாரோ அவர்களை அன்புமணியும் சௌமியாவும் தொடர்பு கொண்டு ஐயா கூப்பிடுகிறார் என்று தைலாபுரத்திற்கு போகாதீர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ நாங்கள் செய்து தருகிறோம் என்று பேசியிருக்கிறார்கள்.
உதாரணமாக கடலூர் கிழக்கு மாவட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட அந்த மாவட்ட நிர்வாகிகளிடம் மருத்துவர் ராமதாஸ் பேசினார் அவர்களிடம் உடனடியாக அன்புமணியும் சௌமியாவும் தொடர்பு கொண்டு தைலாபுரம் தோட்டத்திற்கு போகாத அளவுக்கு தடுத்து அவசரமாக ஒரு பொதுக்குழுவை கூட்டி அன்புமணி கலந்து கொண்டு பேசினார்
இந்த நிலையில் ஜிகே மணி சேலம் அருள் எம்எல்ஏ போன்றவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசிடம் நீங்கள் பேசுவது எல்லாம் அன்புமணிக்கு உடனுக்கு உடனே தெரிய வருகிறது அவருக்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்களா என்று ஆலோசித்திருக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து முக்கிய ஆலோசனைகள் நடத்தும்போது தோட்டத்தில் உள்ளவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் உதவியாளர்கள் உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு ராமதாஸ் ரகசிய ஆலோசனை செய்ய ஆரம்பித்திருக்கிறார் .
ஆனால் இந்த விஷயமும் அன்புமணி காதுக்கு சென்றது இதையெல்லாம் கேட்டுக்கொண்டு தான் அன்புமணி வெளியே பேசும்பொழுது அய்யாவிடம் சில தவறான விஷயங்களை பேசி எங்களுக்குள் பிளவை ஏற்படுத்துகிறார்கள் என பேச தொடங்கினார்.இதற்கிடையே வீட்டில் நடக்கும் எல்லா விஷயமும் எப்படி வெளியே போகிறது என்று தலையை பிய்த்துக் கொண்ட டாக்டர் ராமதாஸ் ஒரு போலீஸ் அதிகாரியை அணுகி இது சம்பந்தமாக பேசியிருக்கிறார் அப்பொழுதுதான் அவர் வீட்டை வந்து சோதனை செய்தபோது ஒட்டு கேட்கும் கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனடியாக எலக்ட்ரானிக்ஸ் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த ஓட்டு கேட்கும் கருவி அகற்றப்பட்டது
இந்த கருவியை பொருத்தவரையில் யாராவது பேசவில்லை என்றால் இந்த கருவி ஆன் ஆகாது அதே சமயம் பேசுவதையோ அல்லது ஏதேனும் சத்தம் கேட்பதையோ தொடர்ந்து ரெக்கார்ட் செய்யும் போது வேகமாக சார்ஜ் குறைந்து விடும் அப்பொழுது சார்ஜ் குறைந்துவிட்டது என்ற தகவலும் சம்பந்தப்பட்டவரின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக சென்று விடும் பின்னர் அந்த ஓட்டு கேட்கும் கருவிக்கு சார்ஜ் போட வேண்டும் .இப்படி அந்த ஒட்டு கேட்கும் கருவி பலமுறை சார்ஜ் இழந்திருக்கிறது அந்த சமயத்தில் வீட்டுக்குள் யாரோ அந்த கருவிக்கு சார்ஜ் போட்டு இருக்கிறார்கள் ஆகவே ராமதாஸுக்கு எதிராக ஒரு ஒற்றன் இன்னும் தோட்டத்திலேயே இருப்பது தெரிய வந்திருக்கிறது
இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் வெளியே சென்று இருந்த சமயத்தில் தனது தாயாரை சந்திக்க அன்புமணி சென்றார் அப்பொழுது அந்த கருவியை அவர் நோட்டமிட்டு சரியாக வேலை செய்திருக்கிறதா என்று பார்ப்பதற்காக சென்றிருக்கலாம் என்கிறார்கள் .இப்பொழுது அந்த ஓட்டு கேட்கும் கருவியை எடுத்து ஒரு டப்பாவில் பத்திரமாக போட்டு ராமதாஸ் வீட்டில் மறைவிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements



