Advertisements

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பது குறித்த கருத்து கணிப்புகள் வெளிவர தொடங்கியுள்ளன . அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் தமிழக மக்கள் மனதில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன
வோட் வைப் என்ற தனியார் நிறுவனம் கடந்த ஆறு மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் வருகிற தேர்தல் குறித்து ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறது .
அந்த ஆய்வறிக்கையில் திமுக அரசுக்கு எதிராக 41% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர் அதே சமயம் 31 சதவீதம் பேர் திமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் . இது மட்டுமல்லாமல் தங்கள் தொகுதி எம்எல்ஏக்கள் சரிவர செயல்படவில்லை என 61 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்
பொதுவாக தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் எம்எல்ஏக்கள் சரியான படி மக்களை அணுகவில்லை மக்கள் பணிகளை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது . மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமா என்ற கேள்விக்கு 37 சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் அதே சமயம் அதிமுக பாஜக கூட்டணியை 32 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்
தற்போதுள்ள சூழ்நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே 5% வாக்களிப்புதான் இடைவெளியாக தெரிகிறது .அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து 42 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் . ஒட்டுமொத்தமாக மக்கள் கருத்துக்கணிப்பில் திமுக விற்கும் அதிமுகவிற்கும் இடையே மிகப் பெரிய வாக்கு வித்தியாசம் தெரியவில்லை எனவே இந்த தேர்தல் களம் சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நடிகர் விஜய்யைபொறுத்த வரையில் அவர் மூன்றாம் இடத்துக்கு வருவார் என்று தெரிவிக்கும் வாக்காளர்கள் 12 சதவீதம் பேர் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் . மக்கள் கருத்துக்கணிப்பில் திமுகவை பொருத்த வரையில் மு க ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன அதே சமயம் அந்தத் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை என்பதுதான் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது
அரசுத் திட்டங்கள் வெறும் அறிவிப்போடு முடிந்து விடுகின்றன அவை நடைமுறைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது
அரசு ஊழியர்கள் மத்தியில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற கோபம் திமுக அரசு மீது அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள் . அரசுத் துறைகளை பொருத்தமட்டில் இந்து சமய அறநிலையத்துறை சுகாதாரத்துறை விளையாட்டு துறை போன்ற ஒரு சில துறைகள் தவிர மற்ற துறை சார்பாக பணிகள் சிறப்பாக இல்லை என்பதும் மக்களினுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது
தேர்தல் வியூகங்களை சரியாக அமைத்து புதிய தேர்தல் அறிக்கைகளுடன் திமுக தீவிர பணியாற்றினால் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 161 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பாக தற்போது சூழ்நிலையில் காணப்படுகிறது என்பது முக்கிய செய்தி ஆகும்
Advertisements


