தப்பி ஓடிய பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த போலீசார் !

Advertisements

சென்னை:

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தவர், பிரபல ரவுடி ‘பாம்’ சரவணன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டவுடன் ‘பாம்’ சரவணன் சென்னையிலிருந்து தலைமறைவானார். அவர்மீது 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகள் உள்ளன.

கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் பிடிவாரண்டு நிலுவையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவருக்குப் பிடியாணை நிலுவையில் இருந்தது. புளியந்தோப்பு போலீசாரும் இவரைக் கைது செய்யத் தேடி வந்தனர்.

இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை ரவுடி ஒழிப்பு போலீசார் அவரை டெல்லி உள்பட பல இடங்களில் தேடிவந்தனர்.

‘பாம்’ சரவணன் சென்னை எம்.கே.பி. நகரில் உள்ள ஒரு குடோனில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்குச் சென்று அவரைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது அவர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். அதில் சப்-இன்ஸ்பெக்டர் மணி படுகாயம் அடைந்தார்.

உடனே போலீசார் ரவுடியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் வலது காலில் காயம் அடைந்தார். அவரைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *