ராகுல் காந்திக்கு விஜய் விட்ட தூது: டெல்லி காங் பரபரப்பு..!

Advertisements
தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட கூட்டணிகள் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்துவிட்டன . திமுகவை விட்டு விலகப் போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி சேர துரை வைகோ திரை மறைவு வேலைகள் செய்தாலும் திமுகவுடன் தான் கூட்டணி என வைக்கோ சொல்லி வருகிறார் .
அதிமுகவை பொறுத்த வரையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவாகிவிட்டது அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் சேரலாம் என தெரிகிறது  . இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி முடிவுகள்தான் இழுபறி யில் இருக்கின்றன .
தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்புகள் முடிவில் தமிழக வெற்றி கழகத்திற்கு 15 சதவீத வாக்குகள் தான் கிடைக்கும் என்ற சர்வே நடிகர் விஜய் மனதை மாற்றியுள்ளது . எனவே சாதகமான ஒரு கூட்டணி அமைக்கும் பணிகளை அவர் தற்பொழுது மேற்கொண்டு வருகிறார் .
அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் தேமுதிக ஓபிஎஸ் இன் புதிய கட்சி ஆகியவை இணையலாம் என தெரிகிறது
தேமுதிகவை பொருத்த வரையில் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்துடன் பேசி முடிவெடுத்து விட்டதாக சொல்கிறார்கள் . ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் செப்டம்பர் 4ஆம் தேதி எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி அதன் பின்னர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் பணிகளை செய்வார் என்று பேசப்படுகிறது .
இந்த நிலையில் திமுக கூட்டணி மீது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான் . அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த இரண்டு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகம் சார்பில் டெல்லிக்கு தூதுவர்களாக நடிகர் விஜய் அனுப்பி இருக்கிறார் .
கேரளாவைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளனர் அவர்கள் நாளை மறுநாள் ராகுல் காந்தியை சந்தித்து பேச இருக்கிறார்கள். அப்பொழுது நடிகர் விஜய். ராகுல் காந்தியை சந்திப்பதற்கான நேரம் குறித்தும் அப்பாயிண்ட்மெண்ட் டைம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் என்ன முடிவு எடுக்கலாம் என ராகுல் காந்தி உள்பட டெல்லி காங்கிரஸ் மேலிடம் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறது .
.
ஏற்கனவே திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில் எதற்காக திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது . தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து ஒருவேளை தோல்வியை சந்தித்தால் காங்கிரஸ் நிலைமை ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இது தவிர கடந்த தேர்தல் சமயத்தில் மு க ஸ்டாலினுடன் ராகுல் காந்தி மிகவும் நெருக்கமாகி விட்டார் இந்த நட்பை எப்படி முறிப்பது என ராகுல் காந்திக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள் . எனவே இது குறித்து அடுத்த வாரம் டெல்லி காங்கிரஸ் மேல் இடம் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறது இந்த கூட்டத்தின் முடிவில் ராகுல் காந்தி தனது கருத்தை அறிவிப்பார் என தெரிகிறது .
தற்போதுள்ள சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி தொடரட்டும் என ராகுல் காந்தி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது தான் திருப்புமுனை செய்தியாக இருக்கிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *