பிற மொழிகளுக்கு அதிக நிதி.. கன்னடத்திற்கு அநீதி” – சித்தராமையா ஆதங்கம்..!

இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளித் தரும் மத்திய அரசு கன்னட மொழியைப் புறக்கணிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக ராஜ்யோட்சவா கொண்டாட்டத்தில் சித்தராமையா பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பழமையான மொழிகளில் ஒன்றான கன்னடத்தின் வளர்ச்சிக்கு உரிய நிதி அளிக்காதது அநீதி என்று குறிப்பிட்டார்.

கன்னட மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட போதும் மற்ற செம்மொழிகளை வளர்க்க மத்திய அரசு கொடுக்கும் நிதியை கன்னடத்துக்கு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

கன்னட மொழி, கலாச்சாரம், அடையாளத்தை குறைமதிப்பிட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கன்னட மக்கள் அவர்களை எதிர்க்க வேண்டும் என்றும், கன்னட மொழிக்கு எதிரானவர்களை கன்னடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும், மாநில மொழியை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *