
அமெரிக்காவிற்கு புடின் கண்டனம்!
இஸ்ரேல் – பாலஸ்தீனம் தொடர்பான தற்போதை போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்கா தோல்வியைச் சந்தித்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற மின்சக்தி தொடர்பான மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது:
“இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. மாறாக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பலை நிறுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இதன் மூலம் அமெரிக்கா லெபனான் மீது தாக்குதல் நடத்த விரும்புகிறதா.? அல்லது அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்த அமெரிக்கா விரும்புகிறதா.? எதற்கு அச்சப்படாத மக்கள் தான் அங்கு வசிக்கிறார்கள்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் இதுவல்ல. பரஸ்பர பேச்சுவார்த்தைமூலம் சமாதான ஒப்பந்தத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டுமே தவிர இது போன்ற அச்சுறுத்தும் வேலையைக் கைவிட வேண்டும்“ எனப் புடின் தெரிவித்துள்ளார்.



