
சென்னை:சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு இந்தியில் பேசிய மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் எண் குறித்தும், சிம்கார்டை பயன்படுத்திய நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் ஏற்கனவே மிரட்டல் விடுத்த நபரா? அல்லது புதிதாக மிரட்டல் விடுக்கும் நபரா? என்பது தொடர்பாகச் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

