பண்ருட்டியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனை, கெடிலம் ஆற்றங்கரை, பண்ருட்டி ரயில் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்ற அவர், அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதோடு அங்கு நிலவும் பிரச்சணைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்றிந்தவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டவர், பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், நகரத் தலைவர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

