தவெக அரசின் தவறுகளை ஆதரிக்க முடியாது – வீரபாண்டியன் !

தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதுகுறித்து கட்சி முடிவு செய்யும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஜனநாயகத்திற்காக ஆதரவு அளிப்பதாகவும், அதற்காக அரசின் தவறுகளை ஆதரிக்க முடியாது என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், கட்சி முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், காவிரி நீர் டெல்டாவை வந்தடைவதைத் தடுக்க முடியாது என்றார். தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முன்பிருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்றும், மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் எந்தச் செயல்களும் இருக்கக் கூடாது என்றும் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *