Vishal 34: அமைச்சர் கே.என்.நேரு – நடிகர் விஷால் திடீர் சந்திப்பு!

Advertisements

நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங், திருச்சி – சிதம்பரம் சாலை, சிறுமருதூர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்த போது,

Advertisements

அந்த வழியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றார். காணக்கிளியநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரை கண்டதும், படப்பிடிப்பு குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.

அமைச்சர் கே.என்.நேரு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த விஷால் அவரை வரவேற்றார். அவருடன் இயக்குனர் ஹரி, நடிகர் சமுத்திரகனியும் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு குழுவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினார்.

பின்னர் எந்த உதவியென்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் நேரு புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் க. வைரமணி, மேற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *