Tamil Nadu Prison Department | 77th Independence Day
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சிறைகளிலிருந்து 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்…
சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சிறைகளிலிருந்து 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
66 சதவீதம் தண்டனை அனுபவித்த 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையிலிருந்து 10 பேர், கடலூர் 4 பேர், திருச்சி 3 பேர், வேலூர் சிறையிலிருந்து 2 பேர் என மொத்தம் 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
