இந்தியா அளித்து  ஆதரவிற்கு நன்றி : உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்!

இந்தியா அளித்து  ஆதரவிற்கு நன்றி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 78-வது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி  மூலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் உலகின் முதல் தொற்றுநோய் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு  தொற்றுநோய்க்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதி ஏற்கப்பட்டது. இதையடுத்து , உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, பாராட்டு தெரிவித்தார். மேலும் அவரது எக்ஸ் தள பக்கத்தில் உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா அளித்து  ஆதரவிற்கும், உறுதிபாட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *