
விழுப்புரத்தில் ஏரி, குளங்கள், கிணறுகளில் பிடிக்கப்பட்ட 33 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த 4 சிறார்களிடம் வனத்துறையினர் விசாரணைநடத்திவருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த பாணாம்பட்டு பிரிவுச் சாலை அருகே வனத்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் நான்கு சிறார்கள் கையில் சாக்கு பையுடன் நடந்து வந்ததை கண்டனர். அவர்களை அழைத்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து பைகளைப் பறிமுதல் செய்து சோதனை செய்ததில் ஏறிக் குளம் கிணறுகளில் பிடிக்கப்பட்ட 33 ஆமைகள் இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஆமைகளைப் பறிமுதல் செய்து நான்கு சிறார்களையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மான் வேட்டையாடுவதற்கு இணையான குற்ற செயல்களில் ஆமை கடத்தலும் ஒன்று என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் ஏரி, குளங்கள், கிணறுகளில் பிடிக்கப்பட்ட 33 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த 4 சிறார்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




