Kanchipuram: ரூ.7.78 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கல்!

Advertisements

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு  ரூ.7.78 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுப்பொருட்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற  விவசாயிகள்  நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை,  ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்தக் கூட்டத்தில்  கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்குத் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவு சங்கம்மூலம்  5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4,09,053/- மதிப்பிலான பயிர் கடன்களும், மூலம்  9 விவசாய பயனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களும்,  வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில்,  2 விவசாய பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பான்கள் மற்றும் 2 விவசாய பயனாளிக்குத் தார்பாய்கள் என மொத்தம் 4 விவசாய  பயனாளிகளுக்கு  ரூ.19,020 மதிப்பிலான   மானியத்துடன்   கூடிய   இடுபொருட்களும், ஆக மொத்தம் 18 விவசாய பயனாளிகளுக்கு, ரூ.7.78 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் மானியத்துடன்   கூடிய  வேளாண்   இடுப்பொருட்களை  மாவட்ட  ஆட்சித்தலைவர்  வழங்கினார.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,  கூட்டுறவு துறை மண்டல  இணை  பதிவாளர்  பா.ஜெயஸ்ரீ,  வேளாண்மை  இணை  இயக்குநர்  முனைவர். பிரின்ஸ்  கிளமென்ட், விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *