Sri Sai Ram Engineering College: 575 புதுமை கண்டுபிடிப்புகளைக் காட்சிபடுத்திய மாணவர்கள்!

Advertisements

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்த மாணவர்களின் புதுமை கண்டு பிடிப்பு போட்டி கண்காட்சியில் மாணவர்கள் தாங்கள் கண்டுபிடித்த புத்தாக்க கண்டுபிடிப்புகளைக் காட்சி படுத்தி இருந்தனர்.

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி லியோ முத்து உள்விளையாட்டு அரங்கில் மாணவர்களின் புதுமை கண்டு பிடிப்பு போட்டி கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் புதுமை கண்டுபிடிப்புகள் காட்சிபடுத்தபட்டு  வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முதல் ஆண்டு முதல் பொறியியல் படிப்புடன் புதுமை கண்டுபிடிப்பு நடவடிக்கையில் ஈடுப்டும் மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.

இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் கண்டுபிடித்த புத்தாக்க கண்டுபிடிப்புகளைக் காட்சி படுத்தி இருந்தனர். இந்தப் புத்தாக்க கண்டுபிடிப்பு  திட்டக் கண்காட்சியில் சுமார் 1700 மாணவர்கள் பங்கேற்று தங்களது 575 புதுமை கண்டுபிடிப்புகளைக் காட்சிபடுத்தி இருந்தனர். அனைத்து படைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் 17 நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்கி இருந்தனர்.

இந்தக் கண்காட்சியை 20 வதுக்கும் மேற்பட்ட தொழில் வல்லூநர்கள் நடுவர்களாகப் பங்கேற்று மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து சிறந்த கண்டுபிடிப்புக்ளை தேர்வு செய்தனர். இந்தக் கண்காட்சியில் சாய்ராம் கல்விகுழுமத் தலைவர் சாய்பிரகஷ் லியோமுத்து, கல்லூரி முதல்வர்கள் முனைவர் பொற்குமரன், முனைவர் பழனிகுமார், முதன்மை தகவல் அதிகாரி நரேஷ்குமார், இயக்குநர் சதீஷ், மேலாண்மை இயக்குநர் முனைவர் மாறன் உட்பட ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள்  ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *