Adhanur: நாற்று நட்டு எதிர்ப்பைத் தெரிவித்த கிராமமக்கள்!

ஆரணி அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த மாலதி சிவானந்தம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். ஆரணி ஆற்காடு நெடுஞ்சாலையிலிருந்து ஆதனூர் கிராமத்திற்கு 2 கிலோமீட்டர் தூரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதனூர் கிராமத்திற்கு செல்லும் இந்த இரண்டு கிலோ மீட்டர் சாலையானது முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறதுபேரளவில் சாலை சீரமைப்புகள் நடைபெற்ற. நிலையில் 6 மாதத்திற்கு கூடத் தாங்காமல் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்பட்டு வருகிறது.

இதனால் ஆதனூர் கிராமத்திலிருந்து பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்குச் செல்லும் பெரியவர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் முற்றிலும் சேதமடைந்த இந்தக் குண்டும்  குழியுமான சாலை தான் பயன்படுத்தி வருவதால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ஆதனூர் கிராம மக்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் ஒன்று கூடிகுண்டும் குழியுமாக உள்ள ஆதனூர் கிராம சாலையில் நாற்று நட்டு கிராம. ஊராட்சி  நிர்வாகத்திற்கு தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாற்று நடும் போராட்டத்தின்போது பொது கூறியதாவது:

ஆதனூர் கிராமத்தில் உள்ள கருவுற்ற பெண்கள் பிரசவத்திற்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் இந்தச் சாலை வழியாகச் செல்லும்போது மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே தானாகவே குழந்தை பிறந்து மருத்துவமனைக்குச் செல்லும் செலவீணங்கள் மிச்சப்படுத்தி வருவதுதான் வாடிக்கையான ஒன்றாகும் என ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கேலிக்கூத்தாகக் கிராம மக்கள் பேசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *