K. Pitchandi: மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட தானிய கிடங்கு!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தில் பல்நோக்கு சேவை திட்டத்தில் கட்டப்பட்ட தானிய கிடங்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்நோக்கு சேவை திட்டத்தில் கட்டப்பட்ட ரூபாய் 15.68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தானிய கிடங்கு கட்டிடத்தைச் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து 93 நபர்களுக்கு 28.61 லட்சம் நகை கடன் தள்ளுபடி மற்றும் அரசின் மகளிர் சுய உதவி  குழுக் கடன், கால்நடை, பராமரிப்பு, பயிர் கடன் உள்ளிட்ட 65 நபர்களுக்கு ரூபாய் 64,33 லட்சம்  நலத்திட்ட கடன் உதவி  வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், பொது விநியோகம் துணை பதிவாளர் ராஜசேகரன், தள அலுவலர் சரவணன், கூட்டுறவு சார் பதிவாளர் சுரேஷ், கூட்டுறவு அலுவலர் வெற்றி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குணசேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் சிவக்குமார் முன்னாள் கவுன்சிலர் ஹரிபாலன், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *