
ஆரணியில் 100 வருடமான பழமையான அரசமரம் வேரோடு சாலையில் சாய்ந்து நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் அரச மரத்திற்கு கற்பூர தீபாரதனை காட்டி சாலையில் விழுந்த அரச மரத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டுவதற்காகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. பில்லர் போடுவதற்காக மிகப்பெரிய குழிகளைத் தோண்டும்போது சாலையோர குழிகளின் அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 100 வருட அடிப்பகுதி 10 அடி சுற்றளவு கொண்ட அரசமரத்தின் கிளைகள் சுற்று வட்டார பகுதிகளில் படர்ந்து கடைகள் கட்டுவதற்கு தடையாக இருந்த அரச மரத்தின் வேர்கள் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அரச மரத்தின் வேர்கள் முழுவதும் தொடர் கன மழை காரணமாகத் துண்டிக்கப்பட்டது. அரச மரத்தின் வேர்கள் மழைநீரில் நனைந்து முற்றிலுமாக ஊறி வந்ததையடுத்து
100 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த 10 அடி சுற்றளவு கொண்ட அரச மரமானது திடீரென்று சாலையின் குறுக்கே சாய்ந்து அருகில் இருந்த மின்சாரக் கம்பங்களின் மீதும் மின் கம்பிகள்மீதும் சாய்ந்ததை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பழமை வாய்ந்த அரச மரம் சாலையின் குறித்து விழுந்த நேரத்தில் சாலையில் எந்த வித வாகனங்களோ மனிதர்கள் நடமாட்டமோ இல்லாமல் இருந்ததால் உயிர் சேதம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வானது ஆரணி சுற்று வட்டார பகுதி முழுவதும் காட்டுத் தீப்போல் பரவியது.மிகப்பெரிய அரசமரம் சாலையின் குறுக்கே விழுந்தும் கூட. மின் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அரச மரத்திற்கு கற்பூர தீபாரதனை காட்டி நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.


