Khalistan movement: ஊருவான பாதை!

Advertisements

காலிஸ்தான், சீக்கிய மதம் சார்ந்த தேசிய இயக்கமாகும். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பஞ்சாப், மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என இரு பகுதிகளில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை இணைத்துத் தனி நாடு வேண்டும் என்ற குறிக்கோளோடு ஒரு அமைப்பு உருவானது. அந்த இயக்கத்தின் பெயரே “காலிஸ்தான்”. இந்த இயக்கத்தினை உருவாக்கியவர் ஜர்னையில் சிங் பிந்தரன் வாலா எனும் சீக்கியர்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்த இயக்கம், சீக்கிய மக்களுக்கு ஒரு சுதந்திர அரசை உருவாக்க விரும்புகிறது. இந்த இயக்கம் 1709 முதல் 1849 வரை இருந்த வடமேற்கு இந்தியக் குடியரசை ஒரு தனி நாடாக உருவாக்குவதற்காகப் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

காலிஸ்தான் பற்றிய முடிவு 1940 களில் உருவானது. ஆனால் 1980 களில் இந்த இயக்கம் ஒரு பெரிய பிரிவினைவாத இயக்கமாக உருவெடுத்தது. சண்டிகர் மற்றும் ரவி-பியாஸ் நீரை பகிர்ந்து கொள்வது, போன்றவற்றில் இந்திய அரசாங்கத்திற்கும் பஞ்சாப்பிற்கும் இடையே சண்டை மூண்டது.

காலிஸ்தான் கனடாவுடன் எப்படி இணைந்தது:

2021-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியதில் 2.1 சதவீதம் பேர் சீக்கியர்கள் இருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவிற்கு அடுத்த படியாகக் கனடாவில் தான் சீகீயர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதுமட்டுமல்ல கனடா அரசாங்கத்தில் உயர்ந்த முக்கிய பதவிகளில் உள்ளனர். முதன் முதலில், 1971, அக்டோபர் 12 -ஆம் தேதி அமெரிக்காவில் வெளியான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் காலிஸ்தான் உதயமாகப் போகிறது, பஞ்சாப் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை பதிவு செய்தனர்.

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்குப் பின்னால் சீக்கிய பிரிவினைவாத இயக்கம் உருவானது.பிரிவினைவாத விவாதம் 1980களில் வன்முறை உச்சத்தை எட்டியது. 1982 இல் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே இயக்கத்தின் முன்னணி ஆதரவாளராக உருவெடுத்தார். சிலர் அவரை ஒரு கவர்ச்சியான போதகராகப் பார்த்தார்கள், மற்றவர்கள் அவரை ஒரு வன்முறை போராளித் தலைவராகக் கண்டார்கள்.

அவர் உண்மையில் ஒரு துறவியாகக் காணப்பட்டார், ஆனால் மறுபுறம், அவர் யாரையும் கொல்லக்கூடிய ஒரு ஒளியை உருவாக்கினார். இந்தியாவில் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே காணப்பட்டார்.
இந்நிலையில் தான் 31 அக்டோபர் 1984 அன்று, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை நான்கு நாட்கள் கலவரத்தைத் தூண்டியது,

31 அக்டோபர் 1984 அன்று இந்திரா காந்தியின் சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவிற்கு வெளியே சிலருக்கு அவரது மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள்பற்றித் தெரியும்.

வடக்கே உள்ள பஞ்சாப், சீக்கிய போராளிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே வன்முறை நடந்தது. அன்று மாலையே கொலைகள் ஆரம்பித்தன. தேசிய தொலைக்காட்சி இந்திரா காந்தியின் உடலைச் சுற்றிலும் “கூன் கா பத்லா கூன்” (“இரத்தத்திற்கு இரத்தத்தைத் தேடு”) என்று கூச்சலிடும் காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பியது. 1 நவம்பர் 1984இல் முதல் சீக்கியர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

“கூன் கா பட்லா கூன்” – அது தொடர்ந்து சென்று, மீண்டும் மீண்டும் தேசத்திற்கு ஒளிபரப்பப்பட்டது. வதந்தி பரவியது, சீக்கியர்களால் கொல்லப்பட்ட இந்து பயணிகளுடன் பஞ்சாபிலிருந்து ரயில்கள் வந்து கொண்டிருந்தன, சீக்கியர்கள் கொண்டாடி இனிப்புகளை விநியோகித்தனர். சீக்கியர்கள் டெல்லியின் நீரை விஷமாக்கினார்கள்.இப்படியே வளர்ந்தது பகை.

காலிஸ்தான் பிரிவினைவாதி சுட்டுக் கொலை. கனடாவில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை. இந்தியாவின் என். ஐ. ஏ அமைப்பால் தேடப்பட்ட்டு வந்த தீவிவாதி சுக்கா துனேக் சுட்டுக் கொலை. 2019-ல் போலி ஆவணங்கள் மூலமாகக் கனடாவுக்கு தப்பிச் சென்ற சுக்கா துனேக் எனும் சுக்தூல் சிங்மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். போலி பாச்போர்ட்டில் கனடாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் குழு மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி கனடாவில் படுகொலை கொல்லப்பட்டார். மத்திய அரசு தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவை சம்மந்தப்படுத்தி செய்திகள் வெளியாகின. பஞ்சாபை இந்தியாவிலிருந்து பிரித்துச் சீக்கியர்களுக்காகப் பெறுத் தர முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தடை செய்யப்பட்ட கே.டி.எஃப்/அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, பயிற்சி வழங்குவது போன்ற தேசத்துரோக செயளில் ஈடுபட்டதாகவும் நிஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்புபற்றி இந்தியா பல ஆண்டுகளாகப் பல முறை தொடர்பு கொண்டு கனடாவிடம் வருத்தத்ததை தெரிவித்திருந்தது.

2018-ஆம் ஆண்டு பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த அம்ரீந்தர் சிங், கனடா அதிபர் ட்ரூட்டோவுக்கு, இந்தியாவில் தேடப்படும் நபர்கள் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றிருந்தது, எனவே அவரை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்தது. மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் நிஜ்ஜார் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு அவர் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்து , அவர் தலைக்கு 10 லட்சம் பரிசு அறிவித்தது.

கனடாவில் வாழும் குடிமகன் ஒருவரின் படுகொலையில், வெளீனாட்டு அரசின் தொடர்பு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும், கறாராகத் தெரிவித்தார். இது தான் ஆரம்பம். பகை புகைய ஆரம்பித்தது. கனடா அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைக்க மறுத்தது, மூண்டது பகை.

ஜி-20 மாநாட்டிற்குப் பிறகு கனடாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக ஊடகங்கள் மூலமாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.இதனால் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பனிப்போர் நிகழ்ந்து வந்த நிலையில், இந்திய தூதரக இயக்குநரைக் கனடாவை விட்டு வெளியேறுமாறு, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டொ அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியாவும் கனடா தூதரை இந்தியாவை விட்டு ஐந்து நாட்களுக்குள் வெளியேறுமாறு அறிக்கை விடுத்தது. நமது பிரதமர் மோடி, கனடாவில் வாழும் இந்தியகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒரு பிரிவினைவாதி கொல்லப்பட்ட நிலையில் இந்தியா மீது குற்றம் சாட்டிய கனடா இப்போது மற்றுமொரு பிரிவினைவாதி, அதுவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் தேடப்பட்டு வந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா கனடாவிற்கு வழங்கும் விசாவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இருப்பினும் கனடா அதிபர் ட்ருடொ இப்போது கொள்ளப்பட்ட சுக்னே துங் கொலைக்கும் இந்தியா தான் காரணம் என்று குற்றம் சாட்டியிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. கனடா குற்றவளிகளுக்கு புகலிடம் கொடுக்கிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *