Anthiyur: ஹாலோ பிரிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராகக் கிராம மக்கள் போராட்டம்!

Advertisements

சட்டவிரோதமாக இயங்கி வரும் ஹாலோ பிரிக்ஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டிக்க  ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பரிசீலனை செய்த நிலையில் அந்தியூர் உட்கோட்ட மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை 20 நாட்களுக்கு மேல் ஆகியும் துண்டிக்காததை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொய்யேரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் ஹாலோபிரிக்ஸ் கல்  உற்பத்தி செய்யும்  நிறுவனம் இயங்கி வருவதாகவும் இதனைச் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த  அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை நடவடிக்கை மேற்கொண்டு நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பலமுறை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்து வந்தனர்.,

மேலும் இதுகுறித்து வருவாய் துறைனர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி இயங்கி வரும் ஹாலோ பிரிக்ஸ் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரிக்கையை முன்வைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

இதன் எதிரொலியாக உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஹாலோ பிரிக்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக டிசம்பர் 4-ம் தேதியன்று துண்டித்துச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பரிசீலித்ததை தொடர்ந்து அந்தியூர் உட்கோட்டை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதுடன் மின் இணைப்பைத் துண்டிக்காமல் காலதாமதம் படுத்துவதாகக் கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாமடுவு பகுதியில் செயல்பட்டு வரும் அந்தியூர் உட்கோட்ட துணை மின் நிலையம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தியூர் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் மின்சார வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்….

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *