Crime: ஓடும் பஸ்சிலிருந்து கர்ப்பிணியை மிதித்துத் தள்ளிய கணவன்!

Advertisements

கர்ப்பிணியை ஓடும் பஸ்சிலிருந்து மிதித்துக் கொன்ற கணவனைப் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பார்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி 24. இவருக்கும் நத்தம் கல்வேலிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகள் வளர்மதிக்கும் 17, பழக்கம் ஏற்பட்டது. 8 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் வளர்மதி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பாண்டிக்கு மது பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு நத்தம் அருகே உள்ள வளர்மதியின் தந்தை வீட்டிற்கு வேம்பார்பட்டியிலிருந்து பாண்டி, வளர்மதி இருவரும் அரசு பஸ்சில் சென்றனர். அப்போது பாண்டி போதையில் இருந்ததால் மனைவியுடன் தகராறு செய்தார். பஸ் எஸ்.கொடை பகுதியில் சென்றபோது பாண்டி மனைவியை ஓடும் பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அக்கம்பக்கத்தினர் வளர்மதியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். இன்ஸ்பெக்டர் முனியசாமி, எஸ்.ஐ., சிவராஜா மற்றும் போலீசார் விசாரித்துப் பாண்டியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதையில் இருந்த பாண்டி எட்டி உதைத்ததில் வளர்மதி இறந்தது தெரிந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *