படித்த பள்ளிக்குக் கணினி பரிசு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

விக்கிரவாண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003 – 2005 காலக்கட்டத்தில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பள்ளி வளாகத்தில் சந்தித்துக்கொண்டனர். இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் வகுப்பறை, பள்ளி மைதானம் ஆகியவற்றைப் பார்வையிட்டுப் பழைய நினைவுகளை மீண்டும் நினைவு கூர்ந்தனர்.

விழா மேடையில் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பம் குறித்தும் அறிமுகம் செய்துகொண்டு அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்குக் கணினி, பிரிண்டர் ஆகியவற்றைத் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *