
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலைப் புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் களமிறங்குவார்கள்? என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையின் முடிவில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலைப் புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக இதற்கு முன்பு நடைபெற்றுள்ள இடைத்தேர்தல்களை புறக்கணித்த வரலாறு உள்ளதாகவும் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.



