
த.வெ.க. ஆட்சியின் 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்றுவிட்டது என்றும், நீதியும் கிடைக்கவில்லை, என்றும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் ஜோசப்விஜய் மீது, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் கையில் உள்ள முக்கிய துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்றது.
இந்த விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி-ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் டாப் கியரில் சென்ற தமிழ்நாடு, தவெக ஆட்சியின் 116 நாட்களில், ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்றும், எங்கள் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக தற்போது வழங்கப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் பக்கம் 293, 295, 296-தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஜாதியபாகுபாடு கொலைகள் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.
எனவே, எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி-ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், 116 நாட்கள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது. கறிக்கடையில் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது. த.வெ.க.ஆட்சிக்கு வந்த பின்னர், 10 ஆணவக்கொலை நடந்துள்ளது. அதற்கும் பெயர் மாற்றிவிட்டனர் எனவும். 116 நாட்களில் 8 சிறை மரணங்கள் நடைபெற்றுள்ளது, நீதியும் கிடைக்கவில்லை,
கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 500 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன எனவும், த.வெ.க. ஆட்சியில் சட்டம் இருக்கு, ஒழுங்கு இல்லை, கடந்த காலத்தில் குற்ற நிகழ்வுகளுக்கு தி.மு.க.அரசு காரணம் என கூறிய கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு தனி நபர்கள்தான் காரணம் என மக்களுக்கு பாடமெடுக்கின்றனர் என்றும் உதயநிதி-ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், லாஜிக்கே இல்லாத குட்டி கதைகள் சொல்லாமல், முதலமைச்சர் நேரடியாகப் பதிலைச் சொல்ல வேண்டும்.
ரீல்ஸ் கண்டெடுக்காமல், ரோல் கேமரா ஆன் இல்லாமல், டேக் டைவர்ஷன் இல்லாமல் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டதை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டார்.




