அடுத்த 5 ஆண்டுகளில் புதிய காவலர் பணியிடங்கள் உருவாக்கம் : அரசு அதிரடித் திட்டம்.!

Advertisements

மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29-ஆயிரத்து 108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரiயில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

சட்டப்பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. முன்னதாக, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் ஜோசப்விஜய் பேசினார். அப்போது, மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29-ஆயிரத்து 108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும், தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டில் 5-ஆயிரம் பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10-ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்படுவர் என்றும்,

போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமத்திற்கு ரூபாய் 10 இலட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும் என்றும், ரூபாய் 212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும் என்றும், பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 1 கோடி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப்விஜய் அறிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *