சட்டமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்ற வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை.!

Advertisements

மாற்றம் மாற்றம் என சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள், சட்டமன்றத்தை மக்கள் மன்றமாக கொண்டு வர வேண்டும் என்று சென்னை தலைமை செயலகத்தில், தே.மு.தி.க.பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காவல்துறை தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கை இன்று நடைபெற்றது என்றும், காவல்துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், இன்சூரன்ஸ் காவலர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளோம் என்றும்,

போக்குவரத்து காவலர்களுக்கு, இளநீர், ஜூஸ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், இருசக்கர வாகனத்திற்கு தனியாகவும், நான்கு சக்கர வாகனத்திற்கு தனியாகவும் சாலைகள் அமைக்க வேண்டும், காவல்துறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஊர்காவல் படைகளுக்கு தகுதி அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும், காவலர் உடையின் இருந்த கேப்டன் புகைப்படத்துடன்  சட்டமன்றத்திற்கு சென்று பேசியிருந்தேன் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

மேலும், லாக்கப் மரணம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும். லாக்கப் மரணம் அடைந்த நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினேன் எனவும்  பிpரேமலதா தெரிவித்தார்.

மேலும் மாற்றம் மாற்றம் என சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள், சட்டமன்றத்தை மக்கள் மன்றமாக கொண்டு வர வேண்டும் எனவும், இப்போது ஒரு தலைமைச் செயலக கட்டிடம் கட்டி விட்டு, அடுத்து வரும் அரசு அதனை தடை செய்யாமல் இருக்க என்ன வழியோ அதை செய்ய வேண்டும் எனவும், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *