
கல்வி என்பது சலுகை அல்ல, ஒவ்வொரு மாணவரின் உரிமை என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் நாடாடளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு சென்றார்.
அங்கு, பழங்குடியினருக்கான ஆசிரமப் பள்ளிகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தி;ல் ஈடுபட்டு வரும் பழங்குடியின மாணவர்களின் குழுவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், நாசிக் பயணத்தின் போது பழங்குடியின மாணவர் குழுவை சந்தித்தேன். அவர்களின் பிரச்சினைகள் கவனத்துடன் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தேன் என்றும், ஒவ்வொரு மாணவருக்கும் கண்ணியமான, பாதுகாப்பான கல்விக்கு உகந்த சூழலை பெறுவதற்கான உரிமை உண்டு என்றும், கல்வி என்பது ஒரு சலுகை அல்ல.
அது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரின் உரிமையாகும் என்றும், விளம்புநிலை சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் நிர்வாக அமைப்பால் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்கு ஆதரவும் சாத்தியமான அனைத்து உதவிகளும் தேவை என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், மராட்டிய மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளையும், ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சி கொள்கைகளில் உறுதியாக நிற்க வேண்டும் எனவும், மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகளை ராகுல்காந்தி கேட்டுக் கொண்டார்.



