Vijayakanth Passed Away: மௌன அஞ்சலி செலுத்திய அமைச்சர்!

விஜயகாந்த் மறைவுக்கு அமைச்சர் காந்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மௌன அஞ்சலி செலுத்தியபின் கைத்தறி விற்பனை நிலையத்தைத் துவக்கி வைத்தனர்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இன்று காலைக் காலமானார். அவரின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் தனது இரங்கலைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். என் நிலையில் தவறாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிலையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா ஒட்டித் திமுக நெசவாளர் அணி சார்பில் கைத்தறி நெசவாளர்கள் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியைத் துவக்க வைக்க வருகை தந்த கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் காந்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்,

பின் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்களை அமைச்சர் மற்றும் அமைப்புச் செயலாளர் பார்வையிட்டுத் துவக்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *