வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி தென்காசி வணிகர்கள் முழக்கம்..!

Advertisements
தென்காசியில் சாலையோரக் கடைகளுக்கு நகராட்சி அனுமதி அளித்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் கடையைக் காலிசெய்யச் சொன்னதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள்  தெரிவித்துள்ளனர்.
தென்காசி குத்துக்கல்வலசைச் சாலையின் ஓரமாக நீண்ட நாட்களாக நடைபாதை வியாபாரிகள் வணிகம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளைக் காலி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க  வேண்டும் என்று நடைபாதை வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *