டீப் ஸ்லீப் மோடிற்குச் சென்ற முதல்வர் – விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்.!

நீங்க கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது சி.எம். சார் என்று முதலமைச்சர் ச.ஜோசப்விஜயை, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி-ஸ்டாலின், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.

இப்படி தொடர்ச்சியா நடக்கின்ற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு இருக்கா-இல்லையா என்று மக்களுக்கு சந்தேகம் வருது என்றும், இந்த சோபா மாடல் அரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.

தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பற்றி வாய்கிழிய பஞ்ச் டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் டீப் சிலிப் மோடிற்கு சென்று விட்டார் எனவும். நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரைக்கும், தமிழ்நாடு தாங்காது சி.எம் சார். என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி-ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *