Madhya Pradesh:கிரிக்கெட் சூதாட்டம்- 15 கோடி பறிமுதல்!

Advertisements

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சோதனையின்போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள் மற்றும் ஐபேட், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

முக்கிய குற்றவாளியான பியூஷ் சோப்ரா தப்பியோடினார். போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரைக் கைது செய்தனர்.

பியூஷ் சோப்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
போலீசார் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை தீவிரமாகத் தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியைப் பிடித்தால் தான் இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவரும்.

 

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *