
M. K. Stalin Food allowance: அரசுப்பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லுாரி மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1,100 மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தலா ரூ.1000 வீதம் உணவு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது உணவு உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



