தமிழ்நாடு அரசியலில் தினந்தோறும் பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் துணை முதல்வராக பதவியேற்கும் வகையில் மேல்மட்ட பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
இது அல்லாமல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமரசம் செய்யப்பட்டு அவருக்கு எந்த தொகுதி வழங்கப்படுகிறது தற்போதைய தமிழக பாஜக தலைவர் நைனார் ராஜேந்திரனுக்கு எந்த தொகுதி வழங்கப்படுகிறது என்பது போன்ற பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன .
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு கூட்டங்களில் பேசும் பொழுதும், அதிமுக மிகப் பலமான கூட்டணியை அமைக்கும் நிச்சயமாக வருகிற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும் என மிக உறுதியாக பேசி வருகிறார் . இதன் பின்னணியில் ஒரு முக்கிய ரகசியம் இருப்பதாக சொல்கிறார்கள் .
அதாவது தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவும் தமிழக வெற்றி கழகமும் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைக்கும் என்பதுதான் அந்த தகவல் .
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும் அதிமுகவும் தமிழக வெற்றிக்கழகமும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது .
இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் . இது மட்டும் அல்லாமல் அதிமுகவில் தற்போது மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது . எனவே ஆட்சி அமைக்கும் போது பாரதிய ஜனதா கட்சிக்கும் முக்கிய பங்கு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அந்த வகையில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது . முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனின் மகளான தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்தவர் தமிழக பாஜக தலைவராகவும் சில காலம் பொறுப்பிலிருந்தார் . சிறந்த பேச்சாளர் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை கண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்பொழுது தமிழ்நாட்டில் நாடார் சமூகத்தினரை பாரதிய ஜனதா கட்சி வசம் வருவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . அந்த வகையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் டெல்லி பாஜக மேல் இடம் பேசி வருவதாக தெரிகிறது .
தமிழிசை சௌந்தர்ராஜன் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் பொன் ராதாகிருஷ்ணன் என பலரும் தேர்தல் களத்தில் இறங்குவார்கள் . நிச்சயமாக தமிழிசை சௌந்தரராஜன் இந்த முறை வெற்றி பெறுவார் என்கிற ரீதியிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது . அனேகமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையே தமிழக பாஜகவில் போர் கொடி பிடித்து வரும் அண்ணாமலையை டெல்லி பாஜக மேல் இடம் சமாதானம் செய்து வருகிறது. அவருக்கு கோவை தொகுதி ஒதுக்கி தரப்படும் என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தேர்தலுக்கு பிறகு முக்கிய பதவி தருவதாகவும் வாக்குறுதி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது .
இதே போல் தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன . நடிகர் சரத்குமாரை பொறுத்தவரையில் அவரது சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து விட்டார் . அந்த வகையில் அவருக்கு தென்காசி தொகுதி ஒதுக்கி தரப்படும் என தெரிகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த விஜயதாரணிக்கு மீண்டும் விளவங்கோடு தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. இது குறித்து ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிச்சாமி சற்று கால அவகாசம் கேட்டிருக்கிறார். எனவே விரைவிலேயே இது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது .
இது போன்ற அரசியல் செய்திகளுக்கு ஜெம் தொலைக்காட்சியுடன் எப்போதும் இணைப்பில் இருங்கள் நன்றி வணக்கம்.


