
புதுச்சேரி சுற்றுலாத்துறை, கல்வித்துறை மற்றும் ஆயுஷ் இயக்குனரகம் சார்பில் 11வது சர்வதேச யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் 11வது சர்வதேச யோகா தின விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாண்புமிகு பொதுப்பணி அமைச்சர், லட்சுமிநாராயணன், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தலைமைச் செயலர் சரத் சௌகான், காவல்துறை தலைமை இயக்குனர் ஷாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், பிரதமர் நரேந்தர மோடியின் சர்வதேச யோகா தின உரை காணொளி வாயிலாக ஒளி பரப்பப்பட்டது.



