Advertisements

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை அதிரடியாக தொடங்கி இருக்கிறார்கள். ஆளும் கட்சியான திமுகவை பொருத்த வரையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு வீட்டுக்கு வீடு வாக்காளர்களை திமுக தொண்டர்கள் சந்தித்து வருகிறார்கள்
அதிமுகவை பொறுத்த வரையில் மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என ஒவ்வொரு நகரங்களாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் பாட்டாளி மக்கள் கட்சி மதிமுக தேமுதிக கம்யூனிஸ்டுகள் போன்றவை கூட்டணி குறித்து பல புதிய முடிவுகளை எடுத்து வருகிறார்கள்
நாம் தமிழர் கட்சியை பொருத்த வரையில் தனியாகத்தான் போட்டியிடுவோம் என சீமான் அறிவித்து விட்ட நிலையில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற பரபரப்பு பேச்சு நிலவி வருகிறது . நடிகர் விஜய்யும் தனித்துப் போட்டியிடப் போவதாக முடிவுகளை எடுத்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் இருந்தபோதிலும் அதிமுக தரப்பில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தொடர்ந்து வலை வீசி வருவதாக சொல்கிறார்கள்
இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார் . இந்த மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது . இந்த மாநாட்டுக்கு யாரும் எதிர்பாராத வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மேலிடத் தலைவர் கார்கேவும் கலந்து கொள்கிறார்கள்
இதற்காக நடிகர் விஜய் தரப்பிலிருந்து ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள் . பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசிய கருத்துக்கள் தற்பொழுது காங்கிரஸ் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது . ஏற்கனவே தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற வேண்டும் முடிந்தால் துணை அமைச்சர் பதவி வேண்டும் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்த நிலையில் திமுக தரப்பில் கடந்த தேர்தலில் தரப்பட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளே தரப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது
இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் காங்கிரஸ் கட்சி இணையலாம் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது . இதன் நிமித்தமாகத்தான் நடிகர் விஜய் நடத்தும் மதுரை மாநாட்டில் ராகுல் காந்தியும் கார்கேயும் கலந்து கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது . முன்னதாக நடிகர் விஜய் டெல்லி சென்று ராகுல் காந்தியையும் கார்கேவையும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது
நடிகர் விஜய்யை பொறுத்த வரையில் தற்பொழுது வெளிவந்துள்ள கருத்து கணிப்புகளும் உளவுத்துறை தகவல்களும் அவருக்கு மூன்றாம் இடம்தான் என தகவல்கள் தெரிவித்துள்ளன. சுமார் 15 சதவீத வாக்குகளை மட்டுமே விஜய் பெறுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் விஜய்யும் தனது நிலையில் இருந்து வேறொரு முடிவுக்கு வந்திருக்கிறார்
நடிகர் விஜயின் புதிய ராஜதந்திர கணக்குப்படி தமிழக வெற்றி கழகத்தில் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் தேமுதிக மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் மூலம் பலமான மூன்றாவது கூட்டணி அமைந்து தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆகலாம் என திட்டம் தீட்டி இருக்கிறார்கள் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மதிமுக தேமுதிக போன்ற கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கும் விஜய் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது
ஏற்கனவே அவர் நடத்திய முதல் மாநாட்டின் போது கூட்டணி சேரும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கற்றது . ஒருவேளை தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தேமுதிக மதிமுக போன்ற கட்சிகள் இணையமானால் அது மிகப் பலமான கூட்டணியாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி என்பது மிகவும் அதிரடியான போர்க்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Advertisements


