ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று ஐதராபாத்தை சேர்ந்த ‘தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 என்ற ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் பூமிக்கு மேலே 450 கி.மீ. உயரமுள்ள சுற்றுப்பாதையில் பல ஆய்வு கருவிகளை நிலைநிறுத்த உள்ளது.
இதில், 7 மாடிகள் கொண்ட, பல நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 ஏவப்படுவதன் மூலம் இந்திய மண்ணிலிருந்து ஒரு இந்திய தனியார் நிறுவனம் விண்கலங்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முதல் முயற்சியாக இது அமைகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




